சத்யஜித் ரே இயக்கிய பெங்காலி மொழித் திரைப்படம். கிராமத்து ஏழைப் பெற்றார்களின் பிள்ளைகளான துர்கா , அ(ப்)பு,அவர்களுடன் வாழும் ஏழைக்கிழவியை சுற்றி நகரும் கதை. கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று நகரத்துக்கு இடம் பெயரும் பின்னணி அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
பழம் திருடுவது, அதற்கு தாயிடம் பேச்சு வாங்குவது, திருடியதை பாட்டியிடம் கொடுப்பது, தம்பிக்கு ரயில் காட்டுவது என படம் பார்த்து முடிந்தவுடன் மனம் முழுவதும் நிறைவது துர்கா தான்.
துர்காவிற்கு அடுத்ததாக என்னை பாதித்தது அந்த வயது முதிர்ந்த பாட்டி.
கடைசியில் யாரும் அற்ற இடத்தில்
இறந்து இருக்கும் போது மனது
என்னமோ போல் ஆகிவிட்டது.
துர்காவுக்கும் தம்பி அபுவுக்கும் இடையிலான பாசமும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். கடைசியாக அபு மணி மாலையை யாருக்கும் தெரியாது ஆற்றில் எறியும் காட்சி அழகாக எடுக்கப்படிருக்கும்.
பதேர் பாஞ்சாலி பார்த்து முடிந்தவுடன் தீர்மானித்து விட்டேன் பதேர் பாஞ்சாலி
யின் தொடர்ச்சியான அபராஜிதோ, அபுர் சன்ஸார் இரண்டும் அடுத்ததாக பார்க்க வேண்டும் என. அத்துடன் எஸ்.ராவின் பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் புத்தகமும் வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment