வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் - 2
பெயரே ஒரு வித கவர்ச்சியை தர எஸ்.ரா வின் புத்தகம் என்பதால் சந்தேகம் இல்லாமல் வாங்கினேன்.பண்டைய இந்தியாவுக்கு வந்த யாத்ரீகர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.பாஹியான், வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா என பல பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
2. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- அ.முத்துலிங்கம்
இந்த புத்தகத்தில் அம்பை, அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ரா , சுஜாதா, அ.மு என இருபது எழுத்தாளர்கள் தமக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி சொல்கிறார்கள்.
3. தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - ரொபின் ஷர்மா
இது The Monk Who Sold His Ferrari என்ற புத்தகத்தின் தமிழ் வடிவம்.சுயமுன்னேற்ற வகை புத்தகம். என்னடா இது வாழ்க்கை என்று எண்ணிய ஒரு பொழுதில் கடை சென்று வாங்கியது.
4. நிகழ்தல் - ஜெயமோகன்
அனுபவக் கட்டுரைகள்.
இப்பவெல்லாம் ஜெயமோகன் வலைப்பதிவு படிப்பது என் அன்றாடக் கடமைகளில் ஒன்று .
5. காண் என்றது இயற்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
இயற்கையை புத்தகத்தினூடாக அறியலாம், அனுபவிக்கலாம். இயற்கையும் இந்த புத்தகமும் நிறைய கற்று தருகின்றன.எஸ்.ராவின் தேசாந்திரி படிக்க வேண்டும் என்று தேடாத கடை இல்லை.
6. பனிமலை - எண்டமூரி வீரேந்திரநாத்
மூன்று பெண்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்கள் அதை அவர்கள் எதிர் கொண்ட விதம் என நாவல் செல்கிறது.இவரது புத்தகங்கள் அநேகமானவை எனக்கு பிடித்தவை.
7. என் இனிய இயந்திரா - சுஜாதா
2021 இல் நடப்பது போன்ற கற்பனைக் கதை. இதை தான் எந்திரனாக எடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எந்திரனுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கண்டுபிடிக்க முடியாது. என் இனிய இயந்திரா வின் அடுத்த பாகம் மீண்டும் ஜீனோ.இரண்டுமே நன்றாக இருக்கும். எல்லோரும் ஜீனோவின் விசிறியாவது உறுதி.
8. மர்மங்களின் பரம பிதா - மருதன்
சுபாஷ் சந்திர போஸ் பற்றி அறியும் ஆவலில் வாங்கினேன். வாசித்த பின் நேதாஜியை ரொம்ப பிடித்து விட்டது. மேலும் அறிய அவரைப் பற்றிய வேறு புத்தகங்களும் வாங்கி வாசித்தேன்.
9. கிராமங்களில் உலவும் கால்கள் - கழனியூரான்
நாட்டாரியல் புத்தகங்களில் உள்ள ஆர்வம் காரணமாக வாங்கியது.பழமை , பண்பாடு பற்றி வாசிக்க நன்றாகவே உள்ளது.
10. பூமியின் பாதி வயது - அ.முத்துலிங்கம்
புத்தகம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு super. பார்த்தவை, படித்தவை, கேட்டவை, அனுபவித்தவை, சிந்தித்தவை,கட்டியவை, மொழிபெயர்த்தவை, இழந்தவை போன்ற தலைப்புகளில்.
No comments:
Post a Comment