எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Saturday, 18 April 2020
(86) எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.Sunday, 23 February 2020
(83)காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராவின் கட்டுரைகள், நாவல்கள் விரும்பி வாசித்தாலும் சிறுகதைகள் பெரிதாக வாசித்தது இல்லை. இப் புத்தகத்தில் 13 சிறுகதைகள் உள்ளன. முதல் கதை 'காந்தியோடு பேசுவேன்'. ஏற்கனவே வாசித்ததாக நினைவு. அருமையான கதை. பெண்கள் ஏன் காந்தியை விரும்பினார்கள் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம். காந்தியையும் புரிந்து கொள்ள உதவும்.காந்தியை நேரில் சென்று சந்தித்த கதை சொல்லியின் அம்மாவினூடாக காந்தி காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. காந்தி பற்றிய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை.
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும், ஷெர்லி அப்படித்தான் போன்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.ராவின் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இப் புத்தகம் தந்துள்ளது.
Tuesday, 26 December 2017
(74)காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்ற வகைகளில் மொத்தமாக 50 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய வாசிப்புக்கு புதிதாக நுழைபவர்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டியாக அமையும். அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த புத்தகத்தினூடாக பல முக்கிய புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது.
வங்காள எழுத்தாளர் போதி சத்வ மைத்ரேய 1980 இல் எழுதிய Jhinuker Peter Mukto என்ற நாவலைப் பற்றியதே முதலாவது கட்டுரையான சிப்பியின் வயிற்றில் முத்து. இந்த நாவலை எஸ். கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாக கொண்டது.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் மௌனி, அழகிரிசாமி பற்றியும் எரியும் பனிக்காடு, இடைவெளி ஆகிய நாவல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்ற கட்டுரை மிக முக்கியமானது. 'சித்திரப் புலி' என்ற comics புத்தகங்கள் பற்றிய கட்டுரையில் தனக்கு மிகவும் பிடித்த comic book ஆன Calvin and hobbes பற்றி எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முக்கியமானவை.
Tuesday, 22 December 2015
(44) இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்
தமிழில் பயணக் கட்டுரைகளை சிறப்பாக
எழுதுபவர்களாக எஸ்.ரா, ஜெயமோகனை சொல்லலாம். ஜெயமோகன் அவரது இணையத்தளத்தில் எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதே போல எஸ். ராமகிருஷ்ணனும் பயணம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார். பயணத்தில் மிகுந்த விருப்பம் உடையவர். அவரது தேசாந்த்திரி அவ்வாறான ஒரு புத்தகம். அது மட்டும் அல்லாது அவரது கட்டுரைகளில் அவரது பயண அனுபவங்களை யும் பல வேளைகளில் இணைத்திருப்பார். அவரது பயண அனுபவங்களை கூறும் இன்னொரு புத்தகம் "இலக்கற்ற பயணி" .
கனடாவில் ஒன்டாரியோ, சிம்கோ ஏரிகளையும் நயகரா நீர்வீழ்ச்சியையும் பார்த்த அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். தனியாக பயண அனுபவங்களை மட்டும் எழுதாமல் அதனுடன் தொடர்பான கதைகள், சம்பவங்களை எழுதும் போது அக்கட்டுரைகள் இன்னும் அழகுறுகின்றன. திருக்கோகர்ணத்து ரதி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் முக்கிய ரதி, மன்மதன் சிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். நானும் இந்தியக்கோயில்களில் ரதி மன்மதன் சிலைகளைப் பார்த்திருந்தாலும் எஸ். ராமகிருஷ்ணனைப் போல இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லை. இந்த புத்தகம் வாசித்த பின் இனி நான் பார்க்கப் போகும் சிலைகளை அணுகும் முறை நிச்சயமாக வேறாகத்தான் இருக்கும்.
போர்ஹே சொற்பொழிவாற்றிய இடத்திற்கு சென்றதையும் ,ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே விசேட அரங்கு அமைத்து நடாத்தப்படும் அவரது நாடகத்தை கனடாவில் பார்த்ததையும் பற்றிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவுக்கு சிலப்பதிகாரத்தில் நிறைய ஈடுபாடு இருக்கிறது .கண்ணகி நடந்த பாதையில் நடந்த அனுபவத்தை "கொற்கையில் கடல் இல்லை" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். கபிலர் , மருதனார் பற்றிய கட்டுரை அருமையான ஒன்று. அடுத்த தடவை இந்தியா போகும் போது கபிலர் குன்று பார்க்க வேண்டும்.
பழையகாலத்தில் தமிழ் மரபில் இருந்த நவகண்டம் என்ற முறை பற்றி ஒரு கட்டுரை உள்ளது. நவகண்டம் என்பது தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் நிகழ்வு ஆகும். ஜெயமோகனும் இது பற்றி எழுதியுள்ளார்.
தனுஷ்கோடி , கோடைக்கானல் , ஸ்ரீரங்கப்பட்டின ஆறு, தயா ஆறு, ஹம்பி பற்றிய கட்டுரைகளும் வாசிக்க இன்பம் தருவன. கூட்ஸ் வண்டிப் பயண அனுபவமும் லொறியில் (3000 km ) பயணம் செய்த அனுபவங்களும் நாமும் அவருடன் கூடவே பயணம் செய்த அனுபவத்தை தருகின்றன. மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.
Sunday, 26 August 2012
தேசாந்திரி
நான் வாசிக்க வேண்டும் என் அதிகமாக விரும்பிய எஸ்.ரா வின் புத்தகம் தேசாந்திரி. ஆனால் இலங்கையில் அப்புத்தகத்தை பெறுவது கஸ்ரமாகவே இருந்தது. எப்ப கடைக்கு போனாலும் தேசாந்திரியை தேடி தோல்வியடைவததே என் வேலை. இந்த தடவை இன்ப அதிர்ச்சியாக தேசாந்திரியை கண்டடைந்தேன்.அப்பிடி ஒரு சந்தோசம்.வீட்டிற்கு வந்ததுமே வாசிக்க தொடங்கிவிட்டேன்.ஆனால் ஒரே மூச்சாக வாசிக்க விரும்பவில்லை. அணுஅணுவாக ரசித்து நீண்ட நாள் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் எவ்வளவு ரசித்தாலும் இரு நாட்களில் முடிந்துவிட்டது. மீண்டும் வாசிக்க வேண்டும்.எஸ்.ரா தான் பயணம் செய்த ஊர்களில் பெற்ற அனுபவங்கள் மற்றும் அவ் இடங்களின் வரலாறு போன்றவற்றை சுவைபட எழுதியுள்ளார்.தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சென்றது, நல்லதங்காள் கிணறு பார்க்க சென்றது,சமண படுகைகள் பார்க்க சென்றது,காந்தள் மலர் பாக்க சென்றது என தன் எழுத்து மூலம் அவ் இடங்களுக்கு எம்மையும் அழைத்து செல்கிறார்.
நாகப்பட்டினம் சென்ற அனுபவத்தை அழகாக எழுதியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பார்க்க வரும் உள் நாட்டினரை விட வெளி நாட்டினரே அதிகம் என்று கூறி சிற்பங்களில் நமக்கு இருக்கும் அக்கறையின்மை பற்றி ஆதங்கப்படுகிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமானதாக ஆரம்பத்தில் பல கவிஞர்களின் கவிதைகள் அழகூட்டுகின்றன. இப்படி 41 கட்டுரைகள்.
வாசிக்கும் போதே அவ்விடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அத்தோடு நமக்கு முன்னால் இருக்கும் எவ்வளவு அழகான விடயங்களை நாம் கவனிப்பதே இல்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது.
Wednesday, 31 August 2011
சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன்
Sunday, 28 August 2011
யாமம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராவின் படைப்புகளில் எப்போதுமே எனக்கு மிகுந்த ஆர்வமும் பிரமிப்பும் இருப்பதுண்டு.அண்மையில் அவரது 'யாமம்' நாவலை வாசிக்க தொடங்கினேன். நாவலின் ஆரம்ப பகுதி வாசிப்பதற்கு ஆர்வம் தராததாக இருந்த போதும், எப்படியாயினும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற கொள்கையிருந்ததால் ஒவ்வொரு நாளும் நாலைந்து பக்கமாவது வாசிக்க வேண்டும் என தீர்மானித்தேன். ஆனால் இரு நாட்களிலேயே நாவல் என்னை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. நேரம் செல்வதே தெரியாமல் வாசித்து முடித்த போது நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைத்த திருப்தி கிடைத்தது.
இந்த நாவலின் கதைப்பாத்திரங்களான அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், பண்டாரம் போன்றவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாத போதும் இவர்களில் ஏதோ ஒரு வகையில் யாமம் எனும் அத்தர் தொடர்புபட்டிருக்கிறது. யாமம் எனும் அற்புத மணம் கொண்ட அத்தர் தயாரிக்கும் கலையை கைவரப்பெற்ற குடும்பத்தினதும்,அந்த யாமத்தினால் ஆட்கொள்ளப்பட்ட வெவ்வேறுபட்ட மனிதர்களதும் கதையினூடாக
கடற்பாக்கம் ஒன்று படிப்படியாக மதராபட்டணமாக உருவான கதையே யாமம் நாவலினூடாக சொல்லப்பட்டுள்ளது.
Saturday, 28 August 2010
துணையெழுத்து
புத்தகம்: துணையெழுத்து
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன்
இணையம் மூலமாகவே எஸ்.ராவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் கட்டுரைத்தொகுப்புகள்,சிறுகதைகள், நாவல்கள் என ஓரளவு அவரது எழுத்துக்களின் அறிமுகம் இருக்கிறது. நாவல்களில் உபபாண்டவம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. இதிகாசங்கள் மீதான புதிய பார்வை பெற காரணமாயிருந்தது. அவரது சிறுகதைகளை விட கட்டுரைகளே எனக்கு பிடித்தவை. இவரது எழுத்துக்கள் எளிமைமையும் ஆழமும் கொண்டவை.
விகடன் பிரசுரமாக வெளிவந்த துணையெழுத்து தமிழில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.பல்வேறு இடங்களில் கிடைத்த அனுபவங்களையும் , தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள், ஊர்கள், நகரங்கள் போன்றவைகளை பதிவு செய்துள்ளார். எந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் கவனிக்க தவறிய விடயங்கள் பலவற்றை எவ்வளவு ஆழமாக அவதானித்திருக்கிறார் என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் எம் மீது ஒரு வித குற்ற உணர்வையும் வரவைக்கிறது. மனிதர்கள் தான் எவ்வளவு விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் அழுக்குகளை வெளி வேஷங்களால் நாம் மறைத்து வைத்து நல்லவர்களாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் எம்மையறியாமலே எமது உண்மையான முகங்கள்வெளிப்படுவது உண்டு. அடுத்தவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக்கொள்கிறோம். தேவையான போது அரவணைத்துக்கொள்கிறோம். தேவை முடிந்த பின் தூக்கி வீசி விடுகிறோம். இக்கட்டுரைகளில் அறிமுகமாகும் கதாபாத்திரங்களினூடு எம்மையும் எம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
எதையுமே ஆழமாக நோக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையில் அழகான சிறு விடயங்கள் பலவற்றை கூட எனது அவசரமான வாழ்க்கையில் அனுபவிக்க தவறிவிட்டிருக்கிறேன். அழகான பொழுதுகள் கூட நினைவில் இருப்பதில்லை.ஒவ்வொரு நாட்களும் ஒரே மாதிரியே இருப்பதாகவே தோன்றும். ஒவ்வொரு பொழுதையும் அழகாக்கிக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அவற்றை விட்டு ஒரு சலிப்பான வாழ்க்கையையே வாழப்பழகிக்கொண்டு இருக்கிறோம். நிசப்தமான இரவு கூட எவ்வளவு அற்புதமானது, ரசிப்பதற்கு பல வண்ணங்களை தன்னுள் கொண்டுள்ளது . ஆனால் நாமோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியரின் அனுபவங்களினூடு நாம் இழந்து விட்ட , ரசிக்க தவறிய பொழுதுகளை மீட்டிப் பார்க்கக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சையை தருகிறது. வாழ்க்கையை சுவாரகசியமாக அனுபவித்து வாழ வேண்டும் , அதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் புத்தகங்களில் ஒன்று. புத்தகம் சிறந்த நண்பன், வழிகாட்டி என்பதை துணையெழுத்து படித்தவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.
துணையெழுத்து: எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
(VERY GOOD)
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன்
இணையம் மூலமாகவே எஸ்.ராவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் கட்டுரைத்தொகுப்புகள்,சிறுகதைகள், நாவல்கள் என ஓரளவு அவரது எழுத்துக்களின் அறிமுகம் இருக்கிறது. நாவல்களில் உபபாண்டவம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. இதிகாசங்கள் மீதான புதிய பார்வை பெற காரணமாயிருந்தது. அவரது சிறுகதைகளை விட கட்டுரைகளே எனக்கு பிடித்தவை. இவரது எழுத்துக்கள் எளிமைமையும் ஆழமும் கொண்டவை.விகடன் பிரசுரமாக வெளிவந்த துணையெழுத்து தமிழில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.பல்வேறு இடங்களில் கிடைத்த அனுபவங்களையும் , தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள், ஊர்கள், நகரங்கள் போன்றவைகளை பதிவு செய்துள்ளார். எந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் கவனிக்க தவறிய விடயங்கள் பலவற்றை எவ்வளவு ஆழமாக அவதானித்திருக்கிறார் என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் எம் மீது ஒரு வித குற்ற உணர்வையும் வரவைக்கிறது. மனிதர்கள் தான் எவ்வளவு விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் அழுக்குகளை வெளி வேஷங்களால் நாம் மறைத்து வைத்து நல்லவர்களாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் எம்மையறியாமலே எமது உண்மையான முகங்கள்வெளிப்படுவது உண்டு. அடுத்தவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக்கொள்கிறோம். தேவையான போது அரவணைத்துக்கொள்கிறோம். தேவை முடிந்த பின் தூக்கி வீசி விடுகிறோம். இக்கட்டுரைகளில் அறிமுகமாகும் கதாபாத்திரங்களினூடு எம்மையும் எம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
எதையுமே ஆழமாக நோக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையில் அழகான சிறு விடயங்கள் பலவற்றை கூட எனது அவசரமான வாழ்க்கையில் அனுபவிக்க தவறிவிட்டிருக்கிறேன். அழகான பொழுதுகள் கூட நினைவில் இருப்பதில்லை.ஒவ்வொரு நாட்களும் ஒரே மாதிரியே இருப்பதாகவே தோன்றும். ஒவ்வொரு பொழுதையும் அழகாக்கிக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அவற்றை விட்டு ஒரு சலிப்பான வாழ்க்கையையே வாழப்பழகிக்கொண்டு இருக்கிறோம். நிசப்தமான இரவு கூட எவ்வளவு அற்புதமானது, ரசிப்பதற்கு பல வண்ணங்களை தன்னுள் கொண்டுள்ளது . ஆனால் நாமோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியரின் அனுபவங்களினூடு நாம் இழந்து விட்ட , ரசிக்க தவறிய பொழுதுகளை மீட்டிப் பார்க்கக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சையை தருகிறது. வாழ்க்கையை சுவாரகசியமாக அனுபவித்து வாழ வேண்டும் , அதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் புத்தகங்களில் ஒன்று. புத்தகம் சிறந்த நண்பன், வழிகாட்டி என்பதை துணையெழுத்து படித்தவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.
துணையெழுத்து: எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
(VERY GOOD)
Subscribe to:
Posts (Atom)

