ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 - சத்யஜித் ரே
( கேங்டாக்கில் வந்த கஷ்டம் )
சத்யஜித் ரே திரையுலகில் பெயர் போனவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா போன்ற திரைப்படங்கள் போதும் அவரது திறைமயை பேச. அதே போல அவர் சிறந்த எழுத்தாளர் என்றும் படித்து இருக்கிறேன். பெலுடாவின் சாகசங்கள் என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியான "கேங்டாக்கில் வந்த கஷ்டம்" என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். வங்காள மொழியில் வெளியான இக்கதையை வீ.பா.கணேசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
துப்பறியும் கதை என்பது பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும். கோடை விடுமுறையை களிப்பதற்காக தபேஷும் ஃபெலுடாவும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் செல்கிறார்கள். அங்கே நடைபெற்ற விபத்து ஒன்றை ஃபெலுடா துப்பறிகிறார். விபத்தில் இறந்த ஷெல்வான்கர் என்பவர் யமன்தக் எனும் ஒன்பது தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய பௌத்த சமய கடவுளின் சிலை வத்திருக்கிறார். விபத்துடன் அச்சிலையும் காணாமல் போய்விடுகிறது. அது விபத்தா அல்லது கொலையா? அதன் பின்னணி என்ன என ஃபெலுடா துப்பறிகிறார். கதை விறுவிறுப்பாக செல்கிறது.
Showing posts with label satyajit ray. Show all posts
Showing posts with label satyajit ray. Show all posts
Sunday, 20 April 2014
Saturday, 11 August 2012
சாருலதா
தாகூரின் பாடலை பாடியபடி சாருலதா ஊஞ்சல்
ஆடும் காட்சி பலராலும் இன்றளவும் சிலாகிக்கப்படும் காட்சிகளில் ஒன்று.இப்படி நிறைய உண்டு. பைனாகுலர் மூலம் பார்க்கும்காட்சி, thank you, thank you என்று பாடும் காட்சி. திரைப்படம் முடிவுறும் காட்சி ...... இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
- Akira Kurosawa
இது உண்மைதான். என் 29 வயதிலாவது இத் திரைப்படங்களை பார்க்க வைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி தான் கூற வேண்டும்.
Friday, 10 August 2012
அபராஜிதோ & அபுர் சன்ஸார்

அபராஜிதோ

பதேர் பாஞ்சாலி தந்த இனிய அனுபவத்தால் அடுத்ததாக பார்த்தது அபராஜிதோ.இது The apu trilogy இன் இரண்டாம் பாகம். துர்காவின் மரணத்தின் பின் காசி வந்து தங்குகிறார்கள் அப்பு குடும்பத்தினர்.அதன் பின் நிகழும் அப்பு தந்தையின் மரணம், அப்புவின் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவது தான் அபராஜிதோ.
அபுர் சன்ஸார்
அபுர் சன்ஸார் The apu trilogy யின் கடைசி பகுதி . அபுவின் திருமணம், மனைவியின் மரணம் , குழந்தை பற்றியது. சர்மிளா தாகூர் தான் மனைவியாக நடித்திருப்பார். குறிப்பாக சர்மிளா தாகூர் வரும் பகுதி நன்றாக இருக்கும்.
The apu trilogy எவ்வளவு பிடித்திருக்கு என்பதை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை.The apu trilogy தான் black and white திரைப்படத்தை இவ்வளவு ரசித்துப்பார்க்கலாம் என சொன்னது. குறிப்பாக பதேர் பாஞ்சாலி. ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே மனதில் இருக்கிறது. அடுத்து சாருலதா பார்க்க தயாராகி விட்டேன்.
Sunday, 5 August 2012
பதேர் பாஞ்சாலி
சத்யஜித் ரே இயக்கிய பெங்காலி மொழித் திரைப்படம். கிராமத்து ஏழைப் பெற்றார்களின் பிள்ளைகளான துர்கா , அ(ப்)பு,அவர்களுடன் வாழும் ஏழைக்கிழவியை சுற்றி நகரும் கதை. கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று நகரத்துக்கு இடம் பெயரும் பின்னணி அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
பழம் திருடுவது, அதற்கு தாயிடம் பேச்சு வாங்குவது, திருடியதை பாட்டியிடம் கொடுப்பது, தம்பிக்கு ரயில் காட்டுவது என படம் பார்த்து முடிந்தவுடன் மனம் முழுவதும் நிறைவது துர்கா தான்.
துர்காவிற்கு அடுத்ததாக என்னை பாதித்தது அந்த வயது முதிர்ந்த பாட்டி.
கடைசியில் யாரும் அற்ற இடத்தில்இறந்து இருக்கும் போது மனது
என்னமோ போல் ஆகிவிட்டது.
துர்காவுக்கும் தம்பி அபுவுக்கும் இடையிலான பாசமும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். கடைசியாக அபு மணி மாலையை யாருக்கும் தெரியாது ஆற்றில் எறியும் காட்சி அழகாக எடுக்கப்படிருக்கும்.
பதேர் பாஞ்சாலி பார்த்து முடிந்தவுடன் தீர்மானித்து விட்டேன் பதேர் பாஞ்சாலியின் தொடர்ச்சியான அபராஜிதோ, அபுர் சன்ஸார் இரண்டும் அடுத்ததாக பார்க்க வேண்டும் என. அத்துடன் எஸ்.ராவின் பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் புத்தகமும் வாசிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)






