தமிழர்கள், இந்துக்களுக்கு முன்னோரால் அளிக்கப்பட்ட செல்வங்களைப் பற்றி கூறும் நூல். எமது அலட்சியத்தால் பெரும்பாலானவற்றை இழந்து கொண்டு வருகிறோம் என்பதையும் இந்த புத்தகம் கூறத் தவறவில்லை.
முதலில் தமிழ் ஏடுகளைப்பற்றி கூறுகிறார். சாமி நாத ஐயரின் ஏடுகள் தேடும் முயற்சியை கூறி அழிந்து போன நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அபிதான சிந்தாமணி என்ற அரிய நூல்,சாரங்கி என்ற வாத்தியக்கருவி,கைரேகை கணிதம், கிருஷ்ணாபுர சிற்பம், தென்காசி ஆலயம், நடராஜர் சிற்பம், ஆவுடையார் கோயில்,சித்தர்கள்,அற்புத சிந்தாமணி, சூரியனார் கோயில் மாமல்லபுரம் என ஐம்பது தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்ணிய புத்தகம்.