
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சென்றது, நல்லதங்காள் கிணறு பார்க்க சென்றது,சமண படுகைகள் பார்க்க சென்றது,காந்தள் மலர் பாக்க சென்றது என தன் எழுத்து மூலம் அவ் இடங்களுக்கு எம்மையும் அழைத்து செல்கிறார்.
நாகப்பட்டினம் சென்ற அனுபவத்தை அழகாக எழுதியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பார்க்க வரும் உள் நாட்டினரை விட வெளி நாட்டினரே அதிகம் என்று கூறி சிற்பங்களில் நமக்கு இருக்கும் அக்கறையின்மை பற்றி ஆதங்கப்படுகிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமானதாக ஆரம்பத்தில் பல கவிஞர்களின் கவிதைகள் அழகூட்டுகின்றன. இப்படி 41 கட்டுரைகள்.
வாசிக்கும் போதே அவ்விடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அத்தோடு நமக்கு முன்னால் இருக்கும் எவ்வளவு அழகான விடயங்களை நாம் கவனிப்பதே இல்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது.
எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம். பல முறை வாசிப்பிற்குப் பின்னும் சலிப்பு ஏற்படுத்தாத எழுத்து நடை. சாரநாத் அனுபவம், குற்றாலம்...
ReplyDeleteநான் ரசித்த பக்கங்கள் இதோ
http://pinnokki.blogspot.in/2012/08/blog-post_26.html