
சினிமா மீதான மோகம் எப்படியெல்லாம் வாழ்வை சீரழிக்கிறது என்பது தான் கதை. நாவலை மெட்ராஸ் பாஷையில் எழுதியிருப்பார். வாசிக்க தொடங்கி சிறிது நேரத்தில் மொழி பிடிபட நாவல் விறுவிறுப்பாக செல்கிறது. செல்லமுத்துவின் மனைவி கம்சலைக்கு வாத்தியார் படம் என்றால் அப்பிடி ஒரு ஆசை. வாத்தியார் மீதும் தான். அவளுக்கு வாத்தியார் படத்தை அறிமுகப்படுத்தியது என்னவோ செல்லமுத்து தான். வாத்தியார் படப் பைத்தியம் எல்லை மீற எல்லாவற்றுக்கும் தடை போடுகிறான் செல்லமுத்து. அந்த நேரத்தில் 'கோடியில் ஒருவன்' என்னும் வாத்தியார் படம் வருகிறது. அத்திரைப்படத்தைப் பார்ப்பதற்காக செல்லமுத்துவிற்கு தெரியாமல் செல்லும் கம்சலை அதற்கு பின் வீட்டிற்கு வரவே இல்லை. வாழ்க்கை எப்படியோ மாறி சீரழிந்து போகிறது. செல்லமுத்துவின் பாத்திரப்படைப்பும் சிறப்பாக அமைக்கப்படிருக்கிறது.
இதில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் வாத்தியார் என்றால் எம்.ஜி.ஆர் தான் என்று அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட நாவல் இது. நல்ல துணிவு தேவை தான். அது ஜெயகாந்தனிடம் இல்லையா என்ன.
No comments:
Post a Comment