இது ஒரு கட்டுரை தொகுப்பு. மாலன் எழுதி வெவ்வேறு இதழ்களில் வெளியானவை.அரசியல், சமூகம்,இலக்கியம்,தமிழ்,இரங்கல் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுளன. இலக்கியம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றவையுடன் ஒப்பிடும் பொழுது அதிக சுவாரசியமாக இருக்கிறது. யானைக்கு இறக்கை வெட்டப்பட்ட கதையை சொல்லும் " கால் இல்லாத கதைகள்" நடிகர் நாகேஷ் பற்றிய "வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல" போன்றவற்றை கூறலாம். அலெக்சாண்டர் நண்பன் அரிஸ்டிப்பஸ் மூலம் டையோஜெனீஸ் இற்கு கடிதம் எழுதிய ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். டையோஜெனீஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் பகுதி கொஞ்சம் bore ஆக தான் இருந்தது. இந்த வாரிசு அரசியல், காவிரி பிரச்சினை என்று ஏற்கனவே அடிக்கடி வாசிக்கப்பட்ட விடயமாக இருந்ததாலோ தெரியவில்லை.நான் கடைசியில் இருந்து முன் நோக்கி தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்படி வாசிப்பது இது தான் முதல் தடவை. முதல் சில கட்டுரைகள் வாசிக்க பெரிதாக நன்றாக இருக்கவில்லை. அதனால் நேராக இலக்கிய பகுதிக்கு தாண்டி, அப்படியே பின் முன்னாக நகர்ந்து கடைசியாக அரசியல் பகுதிக்கு வந்தேன்.
No comments:
Post a Comment