கு. அழகிரிசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு. கு. அழகிரிசாமியின் எழுத்துக்கள் அழகுணர்வு உடையவை.
ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதையை முக்கிய கதைகளில் ஒன்றாக சொல்வார்கள்.இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளுமே சிறப்பானவை.
'அன்பளிப்பு' என்ற சிறுகதை மனதை நெகிழ வைக்கக்கூடியது. புத்தகங்களின் காரணமாக பக்கத்துவீட்டுப் பிள்ளைகள் ஒரு இளைஞனுடன் அன்பாகப் பழகுகிறார்கள்.அவர்களில் சாரங்கன் என்ற சிறுவனை மையமாக வைத்து நகரும் கதையில், அந்த இளைஞன் அறியாமல் செய்யும் புறக்கணிப்பு அச்சிறுவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எளிய நடையில் வாசிப்பவர்கள் மனதைத் தொடுமாறு எழுதியிருக்கிறார்.
அனைத்துக் கதைகளுமே அருமை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை புராணப் பின்னணியில் எழுதப்பட்ட 'வெந்தழலால் வேகாது' என்ற கதை. இதற்கு திருவிளையாடல் தருமி கதை தெரிந்து இருக்க வேண்டும். நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த கதை தற்கால அரசியலையும் நகையாடுவது போலவே இருக்கிறது. தமிழ்ச் சங்கத்திற்கு சங்கப்பலகை செய்து தருமாறு சுந்தரரிடம் (மீனாஷி சுந்தரேஷ்வரர்) புலவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதன் பின் சங்க விடயங்களில் எல்லாம் சுந்தரர் தலையிடத் தொடங்குகிறார். சிறப்பான கதை.

No comments:
Post a Comment