இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் 'மங்கள் சூத்ரா' என்ற பெயரில் எழுதிய நாவலை சுரா தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.இது பிரேம்சந்த்தின் இறுதி நாவல். குறைந்த அளவு பாத்திரப்படைப்புகளுடன் புனையப்பட்ட சிறிய நாவல்.
நேர்மையான எழுத்தாளரான தேவகுமாரனுக்கு சந்தகுமாரன்,சாதுகுமாரன் பங்கஜா என மூன்று பிள்ளைகள். மூத்தவன் சந்தகுமாரன் தந்தையின் குணங்கள் சிறிது கூட இல்லாது பணத்தாசை பிடித்தவனாக இருக்கிறான். பூர்வீக சொத்தை முட்டாள்த்தனமாக தன் தந்தை இழந்துவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டபடியே இருக்கும் சந்தகுமாரன் தன் நண்பனுடன் சேர்ந்து அந்த சொத்தை மீண்டும் பெறுவதற்காக முயற்சி செய்கிறான். அது நேர்மையற்ற செயல் என வாதாடும் தந்தையை தன் வழிக்கு கொண்டுவர முடியாமல்ப் போக இறுதியில் அவர் சுயநினைவு அற்றவர் என்பதை கோர்ட்டில் கூறுவதன் மூலம் அந்த வழக்கை வெல்ல முடியும் எனத் திட்டம் தீட்டுகிறான்.
தேவகுமாரனோ பணம் எதனையும் பெரிதாக சம்பாதித்து வைக்கவில்லை. இருக்கிற கௌரவமும் தன் மகனால் போகப் போகிறது என நினைக்கிறார். தன் மனத்திலேயே ஆழ்ந்த உரையாடலை மேற்கொள்கிறார்.பூர்வீகச் சொத்து இன்றைய மதிப்பில் இரண்டு லட்சம் ஆக உள்ள போதும் கிரிதரதாசனிடம் பெற்றுக்கொண்ட கடனுக்காக அவன் சொத்தை எழுதி வாங்கிய போது அதன் விலை பத்தாயிரம் தான்.அதற்காக இன்று அச்சொத்தைத் திருப்பித்தருமாறு கேட்க முடியுமா? ஆனால் அவர் மனம் சமாதானம் செய்கிறது. பூர்வீக சொத்தில் தனக்கு அனுபவிக்க உரிமை உள்ளது போல தன் மகனுக்கும் உரிமை உள்ளது. அவன் சொல்வதிலும் பிழை இல்லை என முடிவுக்கு வந்து கிரிதரதாசனிடம் சென்று வாதாடுகிறார். கோர்ட்டிற்கு போகாமல் இந்தப் பிரச்சினையை முடிக்குமாறு வாதாடுகிறார். தன் பக்கம் நியாயம் உள்ளதாக கருதும் கிரிதரதாசனோ அவரது பேச்சைக் கேட்கவில்லை.
வீட்டிற்கு வரும் தேவகுமாரன் மகனிடம் வழக்கை தாக்கல் செய்யுமாறு சொல்கிறார். இதுவரை தனக்கு முட்டுக்கட்டையாக இருந்த தந்தையின் ஆதரவால் உற்சாகம் அடையும் அவன் அதற்கான பணத்தை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பாக ஆலோசிக்கிறான். அதற்கும் இதுவரை எந்த நன்கொடை பெறுவதையும் கௌரவத்திற்கு பொருத்தம் அற்றது என நினைக்கும் தேவகுமாரன் தனது பாராட்டு விழாவிற்கு சம்மதிக்கிறார். பண முடிப்பை மன்னனிடம் இருந்து பெறும் போது இதை தான் ஏன் தானமாக நினைக்க வேண்டும், இதுவரை தான் செய்த வேலைக்கு கிடைத்த provident fund போல தானே இப்பணம் என நினைக்கும் போது குற்ற உணர்வில் இருந்து மீள்கிறார்.

தான் நேர்மையானவன் எனத் தனக்குத் தானே நிரூபிப்பதற்காக அவர் காரணங்களைத் தேடிக் கொள்கிறார்.
No comments:
Post a Comment