Friday 3 June 2016

(55) கனவு முடியவில்லை - சரத்சந்திரர்


வங்காள எழுத்தாளர் சரத்சந்திரர் தமிழர்களிடமும் பிரபலமானவர்.இவர் எழுதிய கதையே பல மொழிகளில் பல தடவைக‌ள் படமாக்கப்பட்ட பிரபல திரைப்படமான தேவதாஸ்.  அவரது  'ஸ்ரீகாந்தா' என்ற நாவலை அ.கி.ஜயராமன் தமிழில் 'கனவு முடியவில்லை' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் கற்பனைகள் அடங்கிய சுய‌சரிதைத்தன்மை உள்ள நாவல். இந்த நாவலில் வரும் ராஜலஷ்மிக்கும்  தேவதாஸில் வரும் பார்வதிக்கும் பல ஒற்றுமைகள் காணலாம். ராஜலஷ்மி, அபயா, அன்னதா , கமலலதா போன்ற பெண்களின் கதையே இந்த நாவல்.

2 comments:

  1. இந்த புத்தகத்தை வெகு காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கு கிடைக்கும்/ எந்த பதிப்பகம் என்ற விவரம் தெரிந்தால் கொடுக்கவும், ந்ன்றி
    selvarajc63@gmail.com

    ReplyDelete
  2. தாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும். நான் இப் புத்தகத்தை பாடசாலை நூலகத்தில் இருந்து தான் எடுத்து படித்தேன். மிகவும் பழைய புத்தகம். இப்போது அச்சில் உள்ளதா என தெரியவில்லை. சரத்சந்தர் என்ற பெயருக்காகத்தான் எடுத்து வாசித்தேன். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் என்று இல்லை.

    ReplyDelete