Sunday 28 August 2011

யாமம்



ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் படைப்புகளில் எப்போதுமே எனக்கு மிகுந்த ஆர்வமும் பிரமிப்பும் இருப்பதுண்டு.அண்மையில் அவரது 'யாமம்' நாவலை வாசிக்க தொடங்கினேன். நாவலின் ஆரம்ப பகுதி வாசிப்பதற்கு ஆர்வம் தராததாக இருந்த போதும், எப்படியாயினும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற கொள்கையிருந்ததால் ஒவ்வொரு நாளும் நாலைந்து பக்கமாவது வாசிக்க வேண்டும் என தீர்மானித்தேன். ஆனால் இரு நாட்களிலேயே நாவல் என்னை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. நேரம் செல்வதே தெரியாமல் வாசித்து முடித்த போது நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைத்த திருப்தி கிடைத்தது.


இந்த நாவலின் கதைப்பாத்திரங்களான அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ண‌ப்ப கரையாளர், பண்டாரம் போன்றவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாத போதும் இவர்களில் ஏதோ ஒரு வகையில் யாமம் எனும் அத்தர் தொடர்புபட்டிருக்கிறது. யாமம் எனும் அற்புத மணம் கொண்ட அத்தர் தயாரிக்கும் கலையை கைவரப்பெற்ற குடும்பத்தினதும்,அந்த யாமத்தினால் ஆட்கொள்ளப்பட்ட‌ வெவ்வேறுபட்ட மனிதர்களதும் கதையினூடாக‌
கடற்பாக்கம் ஒன்று படிப்படியாக மதராபட்டணமாக உருவான கதையே யாமம் நாவலினூடாக சொல்லப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment