பாவண்ணனின் புத்தகங்கள் இரண்டு முன்பே வாசித்து இருக்கிறேன். அவரது எழுத்துக்களை நம்பி வாசிக்க முடியும். பாக்குத்தோட்டமும் ஏமாற்றவில்லை. சிறப்பான சிறுகதைகள் 10 இப்புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன. கல்தொட்டி கதையின் கல்தொட்டி செய்பவர், ஒரு நாள் ஆசிரியர் கதையின் திருவட்செல்வர், நூறாவது படம் கதையின் குமாரசாமி என உன்னதமான கதாபாத்திரங்கள் அடங்கிய கதைகள். பாக்குத்தோட்டம் என்ற கதை எல்லாவற்றிற்கும் மகுடம். கர்நாடக மாநிலத்தின் நாட்டிய நாடகக் கலை வடிவமான யட்ச கானம் பார்க்க செல்லும் கதை நாயகன் பார்வையில் எழுதப்பட்ட கதை. யட்ச கானம் பற்றிய விபரிப்புகள் ஒரு தடவை வாசிப்பவரையும் யட்ச கானம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும். சூதாட்டம் மூலம் பாக்குத்தோட்டங்களை இழந்து வாழும் குடும்பத்தை சேர்ந்த சிறுவனுடன் கதை நாயகன் உரையாடும் இடங்கள் அற்புதமானவை.
No comments:
Post a Comment