ஜெயமோகனின் இணையத்தளம் நான் தவறாமல் ஒவ்வொரு நாளும் வாசிப்பேன். ஒவ்வொரு நாளும் முதன் முதலில் செல்லும் தளம் அது தான். புதிதாக வரும் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து விடுவேன். (வெண்முரசு தவிர. வெண்முரசு ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு நாளும் வாசித்தாலும் இடையில் வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் அப்படியே விடுபட்டுவிட்டது. கட்டாயம் வாசிக்க வேண்டும்)
விஷ்ணுபுரம் தவிர்ந்த அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்க கடினமாக இருக்கும் என்ற தயக்கத்தினால் தான். காடு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாக இருந்தது. அடுத்த வருடம் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment