முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
Saturday, 3 June 2017
திருப்புகழ் - 3
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே!
இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவு தரிசனையை யென்றெற் கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளி மணவாளப் பெருமாளே.
மாதர்வச மாயுற் றுழல்வாரும்
மாதவமெ ணாமற் றிரிவாரும்
தீதகல வோதிப் பணியாரும்
தீநரக மீதிற் றிகழ்வாரே
நாதவொளி யேநற் குணசீலா
நாரியிரு வோரைப் புணர்வேலா
சோதிசிவ ஞானக் குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமாளே.

Thursday, 1 June 2017
தமிழ்ப் பாடல்கள் - 1
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தான் குதித்தனன் உலகம் உய்ய. - கந்தபுராணம்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. -கந்தர் அனுபூதி
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. - கந்தரலங்காரம்
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே – யொருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.-திருமுருகாற்றுப்படை
அஞ்சுமுகந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேலென வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந்தோன்றும்
முருகா வென்றோதுவார் முன். -திருமுருகாற்றுப்படை
நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும் குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! - கந்தர் அலங்காரம்
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே- கந்தர் அலங்காரம்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியாரெல்லாம் - கந்தபுராணம்
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய - கந்தபுராணம்
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி - கந்தபுராணம்
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே! - கம்பராமாயணம்
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் - கம்பராமாயணம்
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.- கம்பராமாயணம்
நாற் குணமும் நாற்படையாம ஐம்புலனும் நல் அமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்
வாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு. - நளவெண்பா
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. - நாலடியார்

Thursday, 29 December 2016
(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உரைகளின் தொகுப்பு. கல்லூரிகளில், இலக்கியக் கூட்டங்களில் பேசியவை. நின்று நிதானமாக வாசித்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும். நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது விமர்சனங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்பான உரையில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறார்(தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்). (64) நதியின் கரையில் - பாவண்ணன்
பாவண்ணன் கதைகளில் அன்பு மட்டுமே அடி நாதமாக இருக்கும். பாவண்ணன் என்றதும் ஜோக் அருவியும் துங்கபத்திரையும் யட்ச கானமும் தான் எப்போதும் எனக்கு ஞாபகம் வரும். ' நதியின் கரையில்' 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பாவண்ணன் , வண்ணதாசன் கதைகளைப் படிக்கும் போது தான் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பு வருகிறது. (63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம் எப்போதும் என் பிரியத்துக்கு உரிய எழுத்தாளர். அவரது 'ஒன்றுக்கும் உதவாதவன்' 58 கதைகளைக் கொண்ட தொகுப்பு. வழமை போல் இனிமையான மனதை நெகிழ வைக்கும் கதைகளே இவை. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை. வியட்நாம் போர் உக்கிரத்தை உலகத்திற்கு காட்டிய புகைப்படத்தில் இருந்த சிறுமியை அவர் கனடாவில் சந்தித்த அனுபவங்களை எரிந்த சிறுமி என்ற கதையில் எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த நண்பரைப் பற்றிய ஆறாத்துயரம் கதை என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று.
Sunday, 18 December 2016
(62) வாழும் கணங்கள் - சுந்தர ராமசாமி
சு.ரா 2003 - 2005 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகளின் தொகுப்பு. ராமச்சந்திரன் எழுதிய 'பிரபஞ்சம் ஒரு புதிர்' , குணசேகரனின் 'வடு', 'பாரதியின் கடிதங்கள்' ஏ.கே செட்டியாரின் 'அண்ணல் அடிச்சுவட்டில்' என முக்கிய நூல்களைப் பற்றி எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்பான கட்டுரை தமிழர்களுக்கு அவர் மொழிபெயர்த்துக் கொடுத்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சு.ரா வின் நண்பர் சேதுராமன் பற்றிய கட்டுரை மிக நெகிழ்ச்சியானது.
Subscribe to:
Posts (Atom)