ஆசி கந்தராஜா புலம் பெயர் எழுத்தாளர். இவர் விவசாயப் பேராசிரியராக இருப்பதால் அது தொடர்பான விடயங்களையும் சுவாரசியமாக கதைகளிடையே கொண்டு வந்து விடுகிறார்.
கறுத்தக் கொழும்பான் என்ற முதலாவது கதையே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களுக்கு தான் அதன் அருமை நன்றாக தெரியும். அவுஸ்திரேலியாவில் கறுத்தக்கொழும்பு மரம் எப்படியாவது நாட்ட வேண்டும் என்று நினைக்கும் உடையார் மாமா இறுதியில் அதை விட முக்கியமாக அடுத்த சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என அது தொடர்பான பணியில் இறங்கும் கதை.
அடுத்து பனை , முருங்கை என்று யாழ்ப்பாணத்தவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாத உணவு வகைகளைப்பற்றிய கதைகள். அவை தொடர்பான சகல விடயங்களையும் கதைகளில் சொல்கிறார். ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் இருப்பதால் கிழக்கு , மேற்கு ஜேர்மனி பற்றியும் தனது கதைகளில் தெளிவாக எழுதியுள்ளார்.
இவரது எழுத்துக்கள் இடையிடையே அ. முத்துலிங்கத்தை நினைவூட்டுகின்றன.
No comments:
Post a Comment